தூய்மை இந்தியா இயக்கம்-நகர்ப்புறம் 2.0 (SBM-U 2.0)-இன் கீழ், 2026 செப்டம்பருக்குள் "லக்ஷ்ய ஜீரோ டம்ப்சைட்ஸ்" (குப்பைக்கிடங்கற்ற நிலை) இலக்கை அடைவதற்காக, ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் குப்பைக்கிடங்கு சீரமைப்பு முடுக்கத் திட்டத்தை (DRAP) தொடங்கியுள்ளது.
பழைய குப்பைக்கிடங்குகளைச் சீரமைத்து அவற்றைப் பசுமை மண்டலங்களாக மாற்றுவது இதன் நோக்கம். 202 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 214 குப்பைக்கிடங்குகளில் சுமார் 8.8 கோடி மெட்ரிக் டன் பழைய கழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பழைய கழிவு (legacy waste) என்பது பல ஆண்டுகளாகக் குப்பைக்கிடங்குகளில் குவிந்துள்ள நகராட்சித் திடக்கழிவாகும்; இவை கசிவுநீர் (leachate), மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை வெளியிடுகின்றன.