நாகாலாந்தின் மெட்சிபேமா பகுதியில் 'டெட்ராகோனுலா நாகாலாந்தென்சிஸ்' (Tetragonula nagalandensis) என்ற புதிய கொடுக்கில்லாத் தேனீ இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். முதன்முதலில் கண்டறியப்பட்ட நாகாலாந்து மாநிலத்தின் நினைவாக இதற்குப் பெயரிடப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் அறியப்பட்ட கொடுக்கில்லாத் தேனீ இனங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.