இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று தேசிய கால்-கை வலிப்பு நோய் தினம் (National Epilepsy Day) கடைப்பிடிக்கப்படுகிறது. கால்-கை வலிப்பு, அதன் அறிகுறிகள், சிகிச்சை மற்றும் வலிப்பின்போது அளிக்க வேண்டிய முதலுதவி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். கால்-கை வலிப்பு என்பது மூளையில் ஏற்படும் இயல்புக்கு மாறான மின் செயல்பாட்டால், தூண்டுதல் ஏதுமின்றி மீண்டும் மீண்டும் வலிப்பு ஏற்படும் ஒரு நரம்பியல் கோளாறு ஆகும்.