அசாமின் டெஹிங் பட்காய் தேசியப் பூங்காவில் 37 அழிவாய்ப்பு இனங்கள் உட்பட மொத்தம் 165 வண்ணத்துப்பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பூங்கா திப்ருகர், தின்சுகியா மாவட்டங்களில் 234.26 சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ளது; அசாம் பள்ளத்தாக்கு வெப்பமண்டல ஈரப்பசுமைமாறாக் காடுகளின் எஞ்சியுள்ள பகுதிகளில் ஒன்று. 937 சதுர கி.மீ டெஹிங் பட்காய் யானைகள் காப்பகத்தின் மையப் பகுதியாக இது உள்ளது.