தூத்துக்குடி கடற்கரைக்கு அருகிலுள்ள பட்டினமருதூரில் தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை சுமார் 1,500 தொல்பொருட்களை அகழ்ந்தெடுத்துள்ளது. பண்டைய நாணயங்கள், பீங்கான் மட்பாண்டத் துண்டுகள், சங்கு அணிகலன்கள், உருவச் சிலைகள் ஆகியவை இவற்றில் அடங்கும். முற்காலப் பாண்டியர்களின் பண்டைய துறைமுகமான கொற்கையைப் போலவே பட்டினமருதூரும் ஒரு முக்கியக் கடற்கரை வணிக மையமாக இருந்திருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். சங்க காலத்தில் கொற்கை முத்துக் குளித்தலுக்கும் ரோமானியப் பேரரசு, தூரக் கிழக்கு நாடுகளுடனான வணிகத்துக்கும் புகழ்பெற்றிருந்தது. இந்தப் பகுதியில் பல்வேறு பண்பாட்டுக் கட்டங்களும் பண்டைய காலத்தில் தீவிரமான கடல்வழி வணிகமும் இருந்ததை இக்கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.