திறனை உயர்த்தவும் நெரிசலைக் குறைக்கவும் தனது அதிக அடர்த்தி வலையமைப்பில் (HDN) சுமார் 11,000 கி.மீ.-ஐ நான்கு வழித்தடமாக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. தில்லி–ஹவுரா, ஹவுரா–சென்னை, சென்னை–மும்பை, மும்பை–தில்லி, தில்லி–சென்னை, மும்பை–ஹவுரா, தில்லி–குவாஹாட்டி ஆகிய ஏழு அதிக அடர்த்தி வழித்தடங்கள், வலையமைப்பின் சுமார் 16% மட்டுமே இருந்தும் மொத்த ரயில் போக்குவரத்தில் சுமார் 41%-ஐக் கையாளுகின்றன. மேலும், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பான கவச் 4.0, தில்லி–மும்பை, தில்லி–ஹவுரா வழித்தடங்களில் 2,490 கி.மீ. தூரத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது; இதில் துல்லியமான ரயில் இருப்பிடக் கணிப்பு, பெரிய யார்டுகளில் மேம்பட்ட சிக்னல் தகவல், மின்னணு இடைப்பூட்டு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பு உள்ளன.